அமெரிக்காவில் 2012ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார்.
முன்னாள் அலாஸ்கா கவர்னர் ஷாரா பாலினும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாரா தேர்தலில் போட்டியிடுவார் என அவரது மகள் கூறுகிறார்.
இது குறித்து ஷாரா பாலின் கூறுகையில்,"2012ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை" என்கிறார்.
ஷாராவின் மகள் பிரிஸ்டன் பாலின் கூறுகையில்,"தனது தாயார் தேர்தலில் பங்கேற்பது குறித்து உரிய முடிவு எடுத்து உள்ளார்" என்றார்.
லோவா பகுதியில் ஷாரா பாலின் திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார். அவரது இந்த வருகை மூலம் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடுவது குறித்த யூகங்கள் அதிகரித்து உள்ளன. லோவா பகுதிக்கு ஒபாமா வருகையையொட்டி ஷாரா பாலின் பயணமும் அமைந்துள்ளது.
இங்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை: சாரா பாலின்
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment