பிரான்ஸ் நாட்டின் லியான் நகருக்கு அருகில் உள்ள செயின்ட் மார்டின் ல ப்ளெய்ன் என்ற இடத்தில் விலங்குகள் காப்பகம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
கொரில்லா ஒன்று குட்டியாக இருந்த போது அதன் தாய் அதற்கு பாலூட்ட மறுத்து ஒதுக்கியது. அந்த குட்டி கொரில்லா 1998ல் பெர்ரி தம்பதியினர் வசம் வந்தது. அதற்கு டிஜிட் என பெயர் சூட்டி புட்டிப்பால் கொடுத்து பிரான்ஸ் நாட்டுத் தம்பதியினர் தங்கள் குழந்தையைப் போல் வளர்க்க தொடங்கினர்.


அது அவர்களுடன் விளையாடுவதும், மகிழ்ச்சியுடன் முத்தத்தை பரிமாறிக் கொள்வதும் பார்ப்பவரை ஆச்சரியமடைய வைக்கிறது. தற்போது 80 கிலோ எடையுள்ள டிஜிட் சுமார் 50 வயது வரை வாழக்கூடியது என்கின்றனர் இந்த தம்பதியினர்.


0 comments:
Post a Comment