MailPrint நடிகை விஜயலட்சுமியின் புதிய புகார்

Tuesday, July 19, 2011


சீமான் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள்,  எனவே சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.
விஜய் நடித்த "பிரண்ட்ஸ்" படத்தில் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் விஜயலட்சுமி.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொலீசில் விஜயலட்சுமி அளித்த புகாரில், இயக்குனர் சீமான் தன்னை காதலித்து, கணவன்-மனைவி போல வாழ்ந்து விட்டு இப்போது திருமணம் செய்ய மறுப்பதாக கூறியிருந்தார்.
முதலில் கொடுத்த புகாரின் மீது பொலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விஜயலட்சுமி புதிய புகார் ஒன்றை கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்:
எனக்கும், சீமானுக்கும் கடந்த 3 வருடங்களாக தொடர்பு இருந்தது. நானும், அவரும் நெருங்கி பழகினோம்.
புதுச்சேரியில் அவர் சிறையில் இருந்தபோது எனக்கு பல கடிதங்களை எழுதினார்.
அதில் என்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி அவர் நடந்துகொள்ளாமல் என்னை ஏமாற்றிவிட்டார்.
மதுரையில் நானும், அவரும் ஒரு ஓட்டலில் தங்கியபோது கணவன் - மனைவியாக வாழ்ந்தோம்.
என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதற்காக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை நகர பொலீஸ் கொமிஷனரிடம் புகார் கூறியிருந்தேன்.
ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை, எனக்கு இப்போது பல மிரட்டல்கள் வருகிறது.
சீமான் ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள், இனிமேலாவது சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

0 comments:

IP
Blogger Widgets