இம்மாத இறுதியில் 7ஆம் அறிவு பாடல்கள் வெளியீடு

Tuesday, July 19, 2011


ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் மூன்று வேடங்களில் சூர்யா நடிக்கும் '7ஆம் அறிவு' படத்தின் பாடல்கள் வெளியீடு எப்போது என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அதற்கான பதிலை அப்படத்தின் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் அளித்திருக்கிறார்.

”கஜினி” படத்தில் முதன் முதலாக இந்த மூவர் கூட்டணி அமைந்தது, படமும் அபார வெற்றி பெற்றது.
சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இக்கூட்டணி '7ஆம் அறிவு' படத்தின் மூலம் இணைந்திருக்கிறது.
அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி கமல்ஹாசன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இதனால் ரசிகர்களிடம் அளவிற்கதிகமான எதிர்பார்ப்பை இப்படம் உருவாக்கியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதால் டப்பிங், எடிட்டிங், இசைக்கோர்ப்பு உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இம்மாத இறுதியில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என்று ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்திருக்கிறார்.
அநேகமாய் ஜூலை 29-ல் இப்படத்தின் பாடல்கள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

0 comments:

IP
Blogger Widgets