சச்சினின் 100 வது சதம் குறித்த எதிர்பார்ப்பு இந்திய அணியின் செயல்பாடுகளை பாதிக்கும்: ஆண்டர்சன்

Tuesday, July 19, 2011

சச்சின் டெண்டுல்கரின் 100 வது சதம் குறித்து இந்திய அணியினரின் அதீத எதிர்பார்ப்பு, இந்திய அணியின் செயல்பாடுகளைப் பாதிக்கும் என்று இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

அதீத எதிர்பார்ப்புகள் காரணமாக சச்சின் கவனமும், அவரது அணியினரின் கவனமும் திசை திரும்பி அவர்களது செயல்பாடுகளை அது பாதிக்கும் என்றும் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 99 சதங்களை எடுத்து விட்ட சச்சின், தனது 100 வது சதத்தை லார்ட்ஸ் மைதானத்தி்ல எடுப்பார் என்ற அதீத எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்களும், அணியினரும் உள்ளனர். அது சச்சின் மற்றும் இந்திய அணிக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும்.
இயல்பான ஆட்டப் போக்கை அது தடுக்க உதவும். சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியின் போது இலங்கை வீரர் திணேஷ் சண்டிமால் சதம் போடுவதற்காக மிக மிக மெதுவாக விளையாடி அணியின் ஸ்கோர் உயர்வை பாதித்தார் என்பது நினைவிருக்கலாம்.
அவர் விளையாடிய விதம் கிரிக்கட் ஆட்டத்தையும், எங்களையும் அவமதிப்பது போல இருந்தது. எனவே முதல் டெஸ்ட் போட்டியிலேயே சச்சின் தனது 100 வது சதத்தை எடுப்பார் என்ற அதீத எதிர்பார்ப்பு ஆபத்தில் தான் முடியும்.
எது எப்படியோ, லார்ட்ஸ் போட்டியில் சச்சினை ரன் எடுக்க விடாமல் தடுக்க நாங்கள் ஆயத்தமாகி வருகிறோம். சி்ன்னச் சின்ன தவறுகளைச் செய்ய வைத்து இந்தியர்களைத் தடுமாற வைப்போம். அதேசமயம், சச்சினை கோபப்படுத்தும் வகையில் நான் ஒரு வார்த்தையும் பேச மாட்டேன். அப்படிச் செய்தால் அது சச்சினை கோப்பபடுத்தாது, மாறாக இன்னும் சிறப்பாக விளையாடத் தூண்டி விடும். அது எங்களுக்குத் தான் கஷ்டம். எனவே அவரை தூண்டும் விதமாக நான் பேச மாட்டேன் என்றார் ஆண்டர்சன்.

0 comments:

IP
Blogger Widgets