பயிற்சியாளர் பிளட்சரால் இந்தியாவிற்கு வாய்ப்பு: வி.வி.எஸ்.லட்சுமண்

Monday, July 18, 2011

இந்திய கிரிக்கட் அணி தற்போது இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

வருகிற வியாழக்கிழமை இரு அணிகளிடையே முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டி குறித்து இந்திய அணியின் மூத்த வீரரான வி.வி.எஸ்.லட்சுமண் கூறுகையில், டங்கன் பிளட்சர் எங்கள் அணிக்கு கிடைத்துள்ளார். அவரது நுணுக்கமான ஆலோசனை மூலம் இங்கிலாந்தில் வெற்றி பெறுவோம்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தின் போது பிளட்சருடன் நல்ல அனுபவம் கிடைத்ததாக லட்சுமண் கூறினார். பிளட்சர் முன்னாள் இங்கிலாந்து அணி பயிற்சியாளர் ஆவார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி டங்கன் பிளட்சர் பயிற்சியாராக களம் இறங்கும் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும். அனுபவம் வாய்ந்த டங்கனை பெற்றிருப்பது எங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாகும் என லட்சுமண் மனம் திறக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக எனது அதிகபட்ச ஸ்கோராக 74 ரன் ஆகும். இந்த ரன் 2002 ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இங்கிலாந்திற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கவில்லை. அந்தக் குறை இந்தப் பயணத்தில் நீங்கும் என எதிர்பார்க்கிறேன் என்றும் லட்சுமண் தெரிவித்தார்.

0 comments:

IP
Blogger Widgets