இந்திய கிரிக்கட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்திய அணி இங்கிலாந்துடன் 4 பயிற்சி போட்டி, ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஓருநாள் ஆட்டத்தில் விளையாடுகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் பயிற்சி போட்டி வருகிற 21ந் திகதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
பயிற்சி போட்டியின் கிரிக்கட் வரலாற்றில் இது 2,000வது பயிற்சி போட்டியாகும். அதோடு இரு அணிகளும் 100வது பயிற்சி போட்டியில் மோதுகிறது. இதனால் நாளை மறுநாள் தொடங்கும் இந்த ஆட்டம் வரலாற்றில் சிறப்பை பெறுகிறது.
100வது பயிற்சி போட்டியையொட்டி இந்தியா, இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் கப்டன்கள் சிலருக்கு இங்கிலாந்து கிரிக்கட் வாரியம் அழைப்பு அனுப்பி உள்ளது. ஆனால் யார், யாருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது என்ற விவரத்தை வெளியிட மறுத்துவிட்டது.
2,000வது பயிற்சி போட்டி என்பதால் மேலும் முக்கிய வி.ஐ.பி.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. முதல் 90 ஆண்டுகளில் 1000 பயிற்சி போட்டி நடந்தது. அடுத்த 27 ஆண்டுகளில் 999 பயிற்சி போட்டி நடைபெற்று உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து மோதும் 100வது பயிற்சி போட்டி: முன்னணி வீரர்களுக்கு அழைப்பு
Thursday, July 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment