அர்ஜென்டினாவில் கோப்பா அமெரிக்கா கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பராகுவே அணியிடம் பெனால்டி சூட்டில் பிரேசில் தோற்றது.
பிரேசில் அணி தோற்றுப் போன அணி என்பதை மறுக்கவில்லை. ஆனால் பிரேசில் வீரர்கள் துடிப்பாக தான் ஆடியுள்ளனர் என்று அணி மேலாளர் மனோ மென்சஸ் தெரிவித்துள்ளார்.
கோப்பா தோல்வியை எதிர்மறையாக எண்ணி கவலைப்படக் கூடாது. கால்பந்து தோல்வியை எண்ணி கவலைப்பட முடியாது நாம் அமைதியாக இருக்க வேண்டியுள்ளது. நாம் நன்றாக தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டியுள்ளது என்றார்.
செலிசா மிட் பீல்டரன் ரமீரஸ் இந்த தோல்வி குறித்து கூறுகையில்ä, எனது விளையாட்டு சரித்திரத்தில் இதுபோன்ற மோசமான தோல்வியை பார்த்தது இல்லை என்றார். எங்களை வென்ற பராகுவே அணி இதுவரை பெரிய வெற்றி பெறவில்லை. அந்த அணி அரை இறுதி நுழைந்துள்ளது என மனோ வேதனையுடன் தெரிவித்தார்.
கோப்பா அமெரிக்கா போட்டியில் பிரேசில் தோல்வி: மேலாளர் ஆறுதல்
Thursday, July 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment