மொனாகோவில் இன்று நடைபெறும் 10 வது சாம்சங் டைமன்ட் லீக் தடகளப் போட்டிகளின் 100 மீற்றர் உலக சாம்பியனான ஜமைக்காவின் அதிவேக மனிதன் உசைன் போல்ட் இதே பிரிவு ஓட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்தத் தடகளப்போட்டிகளில் வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், போல் வால்ட், 400 மீ தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், 1500 மீ ஓட்டம், 400 மீ ஓட்டம், ஜாவ்லின் த்ரோ, 800 மீ ஓட்டம், டிரிபிள் ஜம்ப், 200 மீ ஓட்டம், 5,000 மீ ஓட்டம், 100 மீ தடை ஓட்டம், 1500 மீ ஓட்டம், 100 மீ ஆடவர் ஓட்டம், 3000 மீ ஸ்டீபிள் சேஸ் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது. இதில் உசைன் போல்ட் முதன் முறையாக 100 மீ ஓட்டத்தில் பங்கேற்கிறார்.
இதில் உசைன் போல்ட்டுடன், நெதர்லாந்தின் மார்டினா சுராண்டி ஓடுகிறார். இவர் 9.93 என்ற வினாடிகளில் சாதனை வைத்துள்ளார். நோர்வே வீரர் ஜெய்சுமா சைடி டியூரே இவர் 9.99 வினாடிகளில் இலக்கை எட்டிய சாதனை வைத்துள்ளார். உசைன் போல்ட் 9.58 என்ற வினாடிகளில் இலக்கை எட்டி உலக சாதனை வைத்துள்ளார்.
பிரான்சின் கிறிஸ்டபி லெமேய்டர், இவர் 9.95 வினாடிகளில் இலக்கை எட்டிய சாதனை கைவசம் வைத்துள்ளார். ஜமைக்காவின் மற்றொரு வீரர் மிஷேல் பிரேட்டர் இவர் 9.88 என்ற சாதனை வைத்துள்ளார்.
அமெரிக்க வீரர் மைக்கல் ராஜர்ஸ் இவர் 9.85 வினாடிகள் என்ற சாதனையை வைத்துள்ளார். மற்றொரு ஜமைக்கா வீரர் நெஸ்டா கார்ட்டர், இவர் 9.78 என்று போல்ட்டிற்கு அடுத்த இடத்தில் உள்ளார். போர்ச்சுக்கல் வீரர் பிரான்சிஸ் ஓபிக்வெலு 9.86 என்ற சாதனையை வைத்துள்ளார். இவர்கள் அனைவரும் இன்று 100 மீ ஓட்டத்தில் மோதுகின்றனர்.
சாம்சங் டைமன்ட் லீக் தடகளம்: 100 மீற்றர் பிரிவில் உசைன் போல்ட் பங்கேற்பு
Monday, July 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment