அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கட் அணியின் புதிய கப்டன் பொறுப்பை மைக்கல் கிளார்க் ஏற்றுள்ளார்.
எனவே டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணிக்கு சர்வதேச வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற கவலை அவருக்கு அதிகமாகி உள்ளது. இதனால் பிக்பாஷ் லீக் கிரிக்கட்டில் ஆடப்போவது இல்லை என அந்த வீரர் முடிவெடுத்துள்ளார்.
உலக்கோப்பை கிரிக்கட் சரிவுக்கு பின்னர் ரிக்கி பொண்டிங் அவுஸ்திரேலிய அணியின் தலைமை பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து தேசிய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கப்டன் பொறுப்பை மைக்கல் கிளார்க் ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இலங்கைக்கு அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி அடுத்த மாதம் பயணம் மேற்கொள்கிறது. இந்த தொடரின் போது டெஸ்ட் கப்டன் பொறுப்பை இந்த வலது கை ஆட்டக்காரர் ஏற்கிறார்.
கோடைகாலத்தில் உலகின் முன்னணி அணிகளான இந்தியா, தென்ஆப்பிரிக்காவுடன் அவுஸ்திரேலியா மோத தயாராக வேண்டியுள்ளது. அதே நேரத்தில் நியூசிலாந்து அணியுடனும் அவுஸ்திரேலியா ஆட வேண்டி இருக்கிறது.
இந்த நிலையில் டெஸ்ட் தொடருக்கு இடையே பிக்பாஷ் லீக் டி20 கிரிக்கட்டில் ஆடுவது தான் தனது இலக்கு என அந்த வீரர் தெரிவித்தார்.
பிக்பாஷ் போட்டியை கைவிடுகிறார் மைக்கல் கிளார்க்
Monday, July 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment