அமெரிக்காவில் மக்களை வாட்டி வதைக்கும் அனல் காற்று: 13 பேர் பலி

Thursday, July 21, 2011

தற்போது அமெரிக்காவில் மன்டானா, டெக்காஸ், ஒக்லகோமா, மேற்கு விர்ஜினீயா உள்ளிட்ட 18 மாகாணங்களில் கடும் வெப்பம் நிலவுகிறது.
அங்கு 100 டிகிரி முதல் 131 டிகிரி வரை அனல் வாட்டுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் அனல் காற்று வீசுகிறது.

ஒக்லகாமா மாகாணம் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 28 நாட்களாக இந்த நிலை உள்ளது. கடும் அனல் காற்று வீசுவதால் அங்குள்ள ரோடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெப்பக்காற்றை தாங்க முடியாமல் பலருக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சிலர் அந்த மாகாணத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். இல்லினாயிஸ் மாகாணத்தில் உள்ள நாஸ்வில்லி, மின்னெசோடா ஆகிய நகரங்களிலும் அனல் காற்று அலை அலையாக வீசுகிறது. அமெரிக்காவில் வீசி வரும் அனல் காற்றுக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர்.
நோய் வாய்ப்பட்டுள்ள பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காற்றில் ஈரப்பதம் குறைவதால் தான் இதுபோன்ற அனல் காற்று வீசுவதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் இதுபோன்ற அனல்காற்று வீசி வருகிறது. இதனால் அங்கு வருடத்துக்கு 162 பேர் பலியாகி உள்ளனர்.

0 comments:

IP
Blogger Widgets