பிரச்சனைகள் நிறைந்த நகரத்தை ஆப்கன் வசம் ஒப்படைக்க நேட்டோ படைகள் திட்டம்

Thursday, July 21, 2011

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் லஷ்கர் கா நகரம் உள்ளது. இந்த நகர பாதுகாப்பை நேட்டோ படையில் உள்ள பிரிட்டிஷ் வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பதட்டம் நிறைந்த இந்த நகர பாதுகாப்பு பொறுப்பை ஆப்கானிஸ்தான் துருப்புகள் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
நேட்டோ ஏற்கனவே அமைதி உள்ள பமியான் மற்றும் கிழக்கு நகரமான மெகதர்லாம் பகுதியை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகள் வசம் ஒப்படைத்து விட்டது.
புதிதாக ஒப்படைக்கப்படும் லஷ்கர் கா நகரம் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு துருப்புகளுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.
ஆப்கானிஸ்தானில் தற்போது முகாமிட்டு உள்ள நேட்டோ படைகள் 2014ம் ஆண்டில் பாதுகாப்பு அதிகாரத்தை ஆப்கானிஸ்தானிடம் ஒப்படைக்க முடிவு செய்து உள்ளது.
அதன் துவக்க கட்டமாக ஒவ்வொரு நகர பாதுகாப்பு பொறுப்பும் தற்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
நேட்டோ திட்டப்படி காபூல், பான்ஜ்ஷிர், ஹெராட் மற்றும் மசார் எ ஷரிப் ஆகிய நகர பாதுகாப்பும் படிப்படியாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ கட்டுப்பாட்டில் 10 ஆயிரம் பிரிட்டிஷ் வீரர்கள் உள்ளனர்.
இவர்கள் 2014ம் ஆண்டு நாடு திரும்புகிறார்கள். இந்த வீரர்களில் பெரும்பாலானவர்கள் ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ளனர்.

0 comments:

IP
Blogger Widgets