பாகிஸ்தானுக்கு ஹிலாரி வழங்கிய நற்சான்றிதழ்

Thursday, July 21, 2011

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளித்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அளித்துள்ள சான்றிதழ் ஒன்றில் இதுதொடர்பாக ஹிலாரி கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்ததாரரான ரேமண்ட் டேவிஸ் என்பவரை பாகிஸ்தான் விடுவித்த 2 நாட்களுக்குப் பிறகு ஹிலாரி இவ்வாறு பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் அளித்துள்ளார்.
இந்த சான்றிதழ் அளித்தால்தான் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு தொடர்பான நிதி உதவியை அமெரிக்கா அளிக்க முடியும். பாகிஸ்தானுக்கு வழங்குவதற்காக இந்த ஆண்டு 296 மில்லியன் டொலர் தரும்படி வெளியுறவுத்துறை அமெரிக்க அரசிடம் கேட்டிருந்தது.
இந்த ஆண்டு ஜனவரியில் ரேமண்ட் டேவிஸ் லாகூரில் இரட்டைக் கொலை வழக்கு ஒன்றில் லாகூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவில் பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர் மார்ச் 16ம் திகதி விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்ட 2 நாட்களில் அதாவது மார்ச் 18ம் திகதி ஹிலாரி இவ்வாறு பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு நன்றாக ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் கூறி சான்றிதழில் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

0 comments:

IP
Blogger Widgets