தொழில் ஆணையாளர்கள் நாயகம் தகவல்
அதற்கேற்ப 18 வயதுக்குட்பட்டவர்களை ஈடுபடுத்தக் கூடாத 51 தொழில்கள் இனம் காணப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர்கள் நாயகம் பேர்ள் வீரசிங்க தெரிவித்தார்.
ஆபத்தான தொழில் துறைகளில் 18 வயதுக்குட்பட்டவர்களை ஈடுபடுத்துவதை தடுப்பது குறித்து விளக்கமளிப்பது தெடர்பாக கொழும்பு ஒலிம்பிக் ஹவுஸ் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்.
இலங்கையில் சிறுவர்களில் 83வீதமானர்கள் கல்வி நடவடிக்கையில் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர். 14 வீதமானவர்கள் பாடசாலைக் கல்வியூடன் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 2வீதமானவர்கள் ஒன்றிலும் ஈடுபடாத நிலையிலுள்ளனர். ஒருவர் தொழில் தறையில் மட்டும் ஈடுபட்டு வருகன்றார். சில வருடங்களுக்க முன்னர் சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரிய வருகின்றது.
14 வயதுக்குட்பட்டவர்களை தொழிலில் அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். அதனைத் தடுப்பதற்கு தொழில் திணைக்களமும் சிறுவர் அதிகார சபையூம் பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன. அவ்வாறான குற்றவாலிகள் மீது வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுக் கொடுத்து வருகின்றௌம்.
முன்னர் அபராதத் தொகையாக இருந்த ஆயிரம் தற்போது பத்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆறுமாத கால சிறைத் தண்டனையூம் ஒரு வருட காலமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கப் புரம்பாக சிறுவரிடம் வேலை வாங்கப்பட்ட கால எல்லைக்கு ஏற்றதாக நீதிமன்றத்தால் நஷ்டஈட்டுத் தெகை ஒன்றும் நிர்ணயிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த அபராதத் தொகையை மேலும் அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறான தண்டனைகள் இருந்த போதிலும் ஒரு சில இடங்கில் சிறுவர்கள் மறைமுகமாக வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இந்த சட்டதிட்டங்கள் குறித்து மக்கள் முறையாக அறியாமையே இதற்கான காரணமாகும்.
இது பற்றி நாம் முதல் முதலில் மக்களுக்கு அறிவூறுத்தியதும் முறைப்பாடுகள் வர ஆரம்பித்தன. முதல் வருடத்தில் 27 வழக்குகளைத் தொடுக்க வாய்ப்புக் கிட்டியது. தற்போத மக்கள் விடயத்தை அறிந்துகொண்டுள்ளதால் வழக்குகள் குறைய ஆரம்பித்துள்ளன.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிரான சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்துக்கு ஏற்ப அதனை இலங்கையிலும் அமுல்படுத்தும் வகையில் அதன் விபரம் விஷேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப 18 வயதுக்குட்பட்டவர்களை ஈடுபடுத்தக் கூடாத 51 தொழில்கள் இனம் காணப்பட்டுள்ளன. அந்தத் தொழில்களின் விபரங்கள் 2010 ஓகஸ்ட் 20 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. அதனை அனைவரும் அறிந்துகொள்வது அவசியமாகும் என மேலும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment