அமைச்சர் காமினி லொக்குகே பெருமிதம்
சிறுவர்களின் நலன் பேனல் விடயத்தில் இலங்கை தெற்காசியாவில் முன்னிலை வகிப்பதாக தொழில் உறவுகள் அபிவிருத்தி மேம்பாடு அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
ஆபத்தான தொழில் துறைகளில் 18 வயதுக்குட்பட்டவர்களை ஈடுபடுத்துவதை தடுப்பது குறித்து விளக்கமளிப்பது தெடர்பாக கொழும்பு ஒலிம்பிக் ஹவுஸ் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
சிறுவர்களின் நலன் பேனல் விடயத்தில் இலங்கை தெற்காசியாவில் முன்னிலை வகித்த போதிலும் சிறுவர்களை தொழில் துறைகளில் ஈடுபடுத்துவது மறைமுகமாக இடம்பெற்று வருகின்றது என அவர் குறிப்பிட்டார்.
சிறுவர்களை தெழிலில் அமர்த்துவதற்கு எதிரான சட்டங்கள் குறித்து மக்கள் அறிந்துகொண்டால்தான் அவற்றிற்கு எதிரான நடவடிககைகளை மெற்கொள்ள வசதியாக இருக்கும்.
18 வயதுக்குட்பட்டவர்களை உள ரீதியாகவூம் உடல் ரீதியாகவூம் பாதிப்படையச் செய்யம் 51 ஆபத்தான தொழிகள் இனம்காணப்பட்டுள்ளன.
அவற்றில் 18 வயதுக்குட்பட்டவர்களை ஈடுபடுத்துவதை தடைசெய்யூம் வகையிhன அறிவித்தல் கடந்த 2010 ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி விஷேட வரத்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டங்கள் கொண்டவரப்பட்டாலும் அதனை நாடும் மக்களும் நன்கு அறிந்தகொள்ள வெண்டும். இல்லையேல் சட்டங்களை அமுல்படுத்துவது கடினமாகும்.
சிறுவர்களை தெழில் துறைகளில் அமர்த்துவதைத் தடுப்பதற்கு தொழில் திணைக்களமும் சிறுவர் அதிகார சபையூம் பொலிஸாரும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
எமது பிள்ளைகளைப் போலவே நாட்டிலுள்ள பிள்ளைகளை நாம் மதிக்க வேண்டும். அரசாங்கம் எவ்வளவூதான் நடவடிக்கை எடுத்தாலும் சிறுவர்களை தொழிலில் அமர்த்துவது மறைமுகமாக இடம்பெற்றுக்கொண்டே வருகின்றது.
இதுபற்றி எங்களுக்கு அறியக் கிடைத்தால்தான் எம்மால் நடவடிக்கை எடுக்க முடியூம் எனவே அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment