அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கூறுகிறார்.
இலங்கையில் தற்போதைக்கு எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாதென பெற்றௌலியத்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கூறினார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்:
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டால் சகல பொருட்களின் விலைகளும் உடனடியாக அதிகரிக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால் விலை குறைக்கப்படும்போது ஏனைய பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதில்லை. இதன் கராணமாக பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவேதான் எரிபொருள் விலையேற்றத்தில் அரசு மிகுந்த கவனத்துடன் செயற்படுகின்றது என்றும் அமைச்சர் கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment