அநுராதபுரம்; மாவட்ட அபிவிருத்திக்கு 200 கோடி ரூபா!

Monday, July 18, 2011

இன்று பணிகள் ஆரம்பம்
2012ஆம் ஆண்டு தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு அநுராதபுரம் மாவட்டத்தில் இன்று 200 கோடி ரூபா செலவிலான அபிவிருத்திப் பணிகள்  ஆரம்பிக் கப்படவூள்ளன. அநுராபுரம் தந்திரிமல ஒயாமடுவ பிரதேசத்தில் சுபமுகூர்த்தமான 9.42 மணிக்கு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படவிருப்பதாக தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரும்இ தேசத்துக்கு மகுடம் ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அநுராதபுரத்திலுள்ள 22 பிரதேச சபைகள் மற்றும் 702 கிராமசேவையாளர்கள் பிரிவில்  பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவூள்ளன. இதன் ஆரம்ப வைபம் இன்று  அநுராதபுரம் ஸ்ரீ மஹாபோதியில் நடைபெறும்.
இதில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க- பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்~ மற்றும் பல முக்கிய அமைச்சர்கள் கலந்துகொள்ளவூள்ளனர் என்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.
இவ்வருட ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அநுராதபுரம் மாவட்டம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததுடன்- பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகவூம் இம்மாவட்டம் காணப்படுவதாலேயே அதனை அபிவிருத்தி செய்யூம் நோக்கில் 2012ஆம் ஆண்டு தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை அநுராதபுரம் மாவட்டத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

0 comments:

IP
Blogger Widgets