யாழ் கட்டளைத் தளபதி தகவல்
யாழ்ப்பாணத்தில் இருந்து சுஹைர் ஷரீப்
பலாலி விமான நிலையம் விரைவில் பொது மக்கள் பாவனைக்குத் திறந்துவைக்கப்படும் என யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சென்றுள்ள ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தகவல் தருகையில்:
இந்திய உதவியுடன் பலாலி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனரமைப்புப் பணிகள் முடியுறும் தறுவாயில் உள்ளன. இந்த விமான நிலையத்துக்கு வரும் பொது மக்களின் நன்மை கருதி காங்கேசன்துறை – பருத்தித்துறை மற்றும் பலாலி ஆகிய பிரதேசங்களில் உள்ள வீதிகள் புனரமைக்கப்பட்டு காபட் வீதிகளாக மாற்றப்பட்டுவருகின்றன.
அதேபோன்று ஏ-9 வீதியும் நான்கு பிரவுகளைக் கொண்டதாக மாற்றப்பட்டுவருகின்றது. புனரமைப்பு நடவடிக்கைகள் முடியும் தறுவாயில் உள்ள பலாலி- அச்சுவேலி மற்றும் தொண்டமானாறு வீதிகள் இந்த வார இறுதியில் திறந்துவைக்கடவுள்ளன.
இதன் காரணமாக இப்பிரதேச மாணவர்களும் பொது மக்களும் பெரும் நன்மையடைவார்கள் என்றும் கட்டளைத் தளபதி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment