புத்தளம் லக்விஜய மின் நிலையம் எதிர்வரும் சனிக்கிழமை (09) முதல் 300 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய நிலையில் இருப்பதால் நாட்டின் மின்சார விநியோகம் சீரடையூம் என இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் நீர்த்தேக்கங்களில் அண்மைக்காலத்தில் நீர்மட்டம் குறைந்து வருவதாலும்- அனல் மின் நிலையங்களிலும் தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் திருத்த வேலைகள் இடம்பெறுவதாலும் மின் உற்பத்தி குறைந்துள்ளது.
புத்தளம் லக்விஜய மின் நிலையம் கடந்த மார்ச் மாதம் முதல் மின் உற்பத்தியை ஆரம்பித்துள்ள போதிலும் செயற்பாடுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக எதிர்பார்த்த அளவூ மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாதிருந்தமை குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment