ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் 2013 ல் காலவரையற்ற டெஸ்ட் கிரிக்கட் போட்டியை நடத்த ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது.
அதாவது வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் வரை டெஸ்ட் போட்டி தொடரும் என்று ஐ.சி.சி. தலைமைச் செயல் அதிகாரி அருண் லோர்கட் தெரிவித்துள்ளார்.
ஐ.சி.சி. எதிர்கால கிரிக்கட் சுற்றுப்பயண நாட்காட்டியில் 4 ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐ.சி.சி. நடத்தவுள்ளது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் முதல் 4 அணிகள் ”பிளே ஆப்” டெஸ்ட் போட்டியில் விளையாடும், இந்தப் போட்டியில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க காலவரையற்ற டெஸ்ட் போட்டியாக அது இருக்கும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
அதாவது இறுதிப் போட்டி என்ற ஒரு டெஸ்ட் போட்டி டிரா என்று ஆகிவிடக்கூடாது என்ற நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக லோகட் தெரிவித்துள்ளார். இருப்பினும் டிரா என்பதை வைத்துக் கொண்டாலும் எந்த அணி சாம்பியன் என்பதை நிர்ணயிக்க பல்வேரு வழிமுறைகளை ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
2013 ல் காலவரையற்ற டெஸ்ட் கிரிக்கட் போட்டியை நடத்த ஐ.சி.சி. முடிவு
Friday, July 22, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment