உண்மையான வீடியோவில் பேச்சு தமிழில்
சனல் -4 போலி வீடியோ ஆவணம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சும் நிபுணர்கள் குழுவும் இணைந்து புதிய ஆய்வொன்றினை ஆரம்பித்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவள நேற்றுத் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றிருக்கும் மேற்படி சனல்-4 வீடியோ ஆவணம் போலியாக சித்தரிக்கப்பட்டதென்பதற்கு தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளனவென்றும் அவர் கூறினார்.
திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத உண்மையான வீடியோ ஆவணத்தில் தோன்றும் நபர்களின் பேச்சுவார்த்தை தமிழிலேயே உள்ளது. இருப்பினும் அதற்குபதிலாக சிங்கள உரையாடல்களை மேற்படி வீடியோ காட்சிக்கு பதிவு செய்துள்ளனர்.
வீடியோ காட்சியில் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களே தோன்றுகின்றனர். இவர்கள் இராணுவத்தினரின் சீருடையில் காட்சியளிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். எல்.ரி.ரி.ஈயினர் தோற்கடிக்கப்பட்டமையை அடுத்து புலிகளுக்கு ஆதரவான குழுவினர் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சனல்-4 போலி விடியோ ஆவணங்களை தயாரிப்பதன் மூலம் வீணான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் நேற்று முன்தினம் ஐ.நாவின் இலங்கைக்கான தூதுவரும் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உரையாற்றுகையில்- சனல்-4 ஆவணத்தில் வெளியாகும் சிங்கள உரையாடல் ஆவணம் சித்தரிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலைக்கு சிறிதும் பொருத்தமில்லையெனவும் கூறினார்.
மேற்படி ஆவணத்தில் தனிப்பட்ட நபர்கள் இராணுவ சீருடையில் காணப்படுவதனை சுட்டிக்காட்டிய மேஜர் ஜெனரல் சில்வாஇ இதற்கு முன்னதாக புலிகள் ஸ்ரீ மகாபோதி வளவிலுள்ள அப்பாவி பக்தர்களை கொலை செய்யும் போதும் கட்டுநாயக்க விமானநிலைய தாக்குதலின் போதும் இராணுவ சீருடையில் தோன்றியிருந்ததை நினைவு கூர்ந்தார்.
மேலும்இ சனல்-4 ஆவணமானது எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்களினால் சர்வதேச சமூகத்தை திசை திருப்புவதற்காகத் தயாரிக்கப்பட்ட தொன்றாகும் என்றும் அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment