பெற்றோலில் தண்ணீர் கலந்திருப்பதாக கூறப்படும் கூற்று அரசியல் லாபம் கருதி மேற்கொள்ளப்படும் செயற்பாடு என்று பெற்றோலிய கைத்தொழில் கூட்டுத்தாபனம் கூறுகிறது.
சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்த வேலை இடம்பெறுவதால் நாடு முழுவதும் பெற்றோல் விநியோகத்தை சீராக வைத்திருக்கும் நோக்கில் 20 ஆயிரம் தொன் பெற்றோலை அமைச்சரவை நியமித்த டென்டர் சபை மூலம் கொள்வனவு செய்யப்பட்டது.
இது தரமானது என இரசாயன சோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது என்று பெற்றோலிய கைத்தொழில் அமைச்சின் செயலாளர் டைட்டன் ஜவர்தன கூறுகிறார்.
இந்த பெற்றோல் தொகை நாட்டிலுள்ள 1000 நிரப்பு நிலையங்களுக்கு வேறாக விநியோகிக்கப்பட்டுள்ளது. அதில் 15 நிரப்பு நிலையங்களில் இருந்து மாத்திரமே முறைப்பாடுகள் கிடைத்ததாக செயலாளர் மேலும் கூறுகிறார்.
முறைப்பாடு கிடைக்கப்பெற்ற 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்த பெற்றோல் மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன. இதில் சேருவில மற்றும் குளியாபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சில மாற்றங்கள் இருந்ததாக அமைச்சின் செயலாளர் மேலும் கூறுகிறார்.
பிரச்சினை ஏதும் இருப்பின் பெற்றோலில் ஓடும் 30 இலட்சம் வாகனங்கள் தொடர்பாகவும் முறைப்பாடுகள் கிடைத்திருக்க லேண்டும் என்று கேள்வியெழுப்பும் அமைச்சு செயலாளர் இந்த நிலையில் பெற்றோலில் ஏதாவது கலப்படம் இடம்பெற்றதாக பொதுமக்கள் கருதினால் 011 5664941 இ 011 5666328 இ 011 5665082 ஆகிய தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டு அது பற்றி முறைப்பாடு செய்யலாம் என்றும் அமைச்சு செயலாளர் கேட்டுக் கொள்கிறார்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment