உப்பில் அயடீன் குறைந்திருந்தால் கடும் சட்ட நடவடிக்கை!

Monday, July 18, 2011

சுகாதார அமைச்சு அறிவிப்பு
சந்தைப்படுத்தப்படுகின்ற உப்பில் குறிக்கப்பட்ட அளவு அயடீன் காணப்படாவிட்டால் உற்பத்தியாளர் களுக்கும்- விற்பனையாளர்களுக்கும் எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித் துள்ளது.
சேற்றுடனோ- மங்கல் நிறத்துடனோ காணப்படுகின்ற உப்பை கொள்வனவு செய்யவோ- பாவிக்கவோ வேண்டாமெனவும் சுகாதார அமைச்சு நாட்டு மக்களிடம் நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

அயடீன் மனித உடலுக்கு மிகவும் அவசியமான இரசாயனப் பதார்த் தங்களில் ஒன்றாகும். அதனை உப்பு ஊடாக வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் செயற்படுத்தியுள்ளது.
60 மில்லியன் ரூபா செலவில் உப்புடன் அயடீனை கலக்கும் இயந்திரங்களை புத்தளம்- ஹம்பாந்தோட்டை உப்பளங்களுக்கு அருகில் சுகாதார அமைச்சு அமைத்துள்ளது. இவ்வாறான வசதி செய்து கொடுக்கப்பட்டும் உப்பில் அயடீனை கலக்காது சந்தைப்படுத்துவதை யிட்டு சுகாதார அமைச்சு கவலை தெரிவித்துள்ளது
இருந்த போதிலும் சுகாதார அமைச்சு நடத்திய ஆய்வில் சந்தையில் காணப்படும் உப்பில் குறிக்கப்பட்ட அளவில் அயடீன் சேர்க்கப்படாதிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்தே சுகாதார அமைச்சு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.
சந்தைப்படுத்தப்படுகின்ற உப்பில் 15 - 30 வீதத்திற்கு இடையில் அயடீன் சேர்க்கப்பட்டிராவிட்டால் அந்த உப்பை உற்பத்தி செய்தவர்களுக்கும்இ சந்தைப்படுத்தியவர்களுக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான அறிவுறுத்தல் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

0 comments:

IP
Blogger Widgets