காட்சியின் அழகை காணவும், இசையை கேட்கவும், நெகிழ்வான காட்சிகளை உணரவும், வாசனையை முகரவும் இந்த தொழில்நுட்பம் மூலம் முடியும்.
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் ராயர்ட் ரோத்ரிகஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கடந்த மூன்று பாகங்களில் இடம் பெற்ற நட்சத்திரங்களே நடித்துள்ளனர்.
டைம் கீப்பர் என்ற பெயரில் உலகையே அச்சுறுத்தும் வில்லனை அழிக்க இரட்டை குழந்தைகளை பயன்படுத்த முடிவு செய்யப்படுகிறது.
அந்த இரட்டையர்கள் டைம் கீப்பரை பழி வாங்கி எப்படி உலகை காக்கிறார்கள் என்பதே கதை.
இரட்டையரில் ஒருவருக்கு எல்லாவற்றையும் வாசனையை வைத்து கண்டுபிடிக்கும் கதாபாத்திரம். இந்த மோப்ப சக்தி படத்தில் வேடிக்கையாகவும் இருக்கும்.
தமிழில் "சுட்டி உளவாளிகள்' என்ற பெயரில் ஆகஸ்ட் 19-ம் தேதி இப்படம் வெளிவருகிறது. |
0 comments:
Post a Comment