நந்தா கதாநாயகனாக நடிக்கிறார், ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக பாலிவுட் நடிகை சுர்வின் நடிக்கிறார்.
பாலிவுட் நடிகர் கௌதம் குரூப், சாம்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் சாரதா ராமநாதன்.
படம் குறித்து அவர் கூறியது அன்றாட செய்திகளில் கடத்தல் சம்பவங்கள்தான் முக்கிய இடம் பிடிக்கின்றன. பெண்களை மட்டும் கடத்துதல், இளைஞர்கள், குழந்தைகளைக் கடத்துதல் என தனித்தனி கடத்தல் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கும்பலின் பின்னணிதான் திரைக்கதை. நாயகன், நாயகிகளுக்கு இந்த கும்பலினால் பிரச்னை வருகிறது. அதை களைந்து அவர்களும், கும்பலால் கடத்தப்பட்ட மற்றவர்களும் எப்படி வெளியே வருகிறார்கள் என்பதைப் பரபரப்பான காட்சிகளின் பின்னணியில் உருவாக்கி வருகிறோம்.
முழுக்க முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது. நா.முத்துகுமார் பாடல்கள் எழுதுகிறார். வித்யாசாகர் இசையமைக்கிறார். ராஜலட்சுமி என்பவரை படத்தொகுப்பாளராக அறிமுகப்படுத்துகிறேன்.
தமிழ் சினிமாவில் இதுவரை பெண் படத்தொகுப்பாளர் பணியாற்றியது இல்லை இதுதான் முதல் முறை என்றார் இயக்குநர் சாரதா ராமநாதன். |
0 comments:
Post a Comment