தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவூ செய்வது தொடர்பான இழுபறி தொடர்ந்து நீடிப்பதாக கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாகப் பதிவூ செய்ய வேண்டுமென ஒரு சாராரும் பதிவில் தீவிரம் காட்டத் தேவையில்லையென இன்னுமொரு சாராரும் வலியூறுத்துவதால் இந்த இழுபறி தொடர்வதாகக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி கூட்டமைப்பை பதிவூ செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட பழம் பெரும் கட்சியான இது. கூட்டமைப்பு பதிவூ செய்யப்படுவதால் தமது கட்சி மழுங் கடிக்கப்படும் எனக் கருதுகின்றது.
அத்துடன் கூட்டமைப்பின் உயிர் நாடி யாக விளங்கும் தமது சிரே~;ட தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு ஏனைய கட்சிகளிலுள்ள தலைவர்கள் கட்சியில் முதன்மை ஸ்தா னங்களுக்கு வந்துவிட வாய்ப்பு உருவாகும் என தமிழரசுக் கட்சி கருதுவ தாக கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர். அதேவேளை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப். (சுரே~; அணி) மற்றும் ரெலோ அமைப்பினர் கட்சியைப் பதிவூ செய்ய வேண்டுமென்பதில் விடாப்பிடியாகவூள்ளனர்.
போராட்டக் குழுக்களாகவிருந்து ஜனநாயக நீரோட்டத்துக்குள் வந்த ரெலோஇ ஈ.பி.ஆர்.எல்.எப்இ கட்சியினர் கூட்டமைப்பு பதிவூ செய்யப்படுவதன் மூலம் தமது அதிகாரத்தை மேலோங்கச் செய்ய முடியூமெனப் பெரிதும் நம்புகின்றனர்.
வன்னியில் புலிகள் கோலோங்கியிருந்த காலத்தில் பிரிந்து போய்க் கிடந்த தமிழ்க் கட்சிகளான தமிழரசுக் கட்சிஇ தமிழ்க் காங்கிரஸ்இ ரெலோஇ ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய நான்கு கட்சிகளையூம் வன்னிக்கழைத்து அவர்களை ஒருமித்த சு+ழலில்இ ஒருமித்த அமைப்பாக இயங்க வேண்டுமென்ற புலித்தலைமையின் அழுத்தமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம்.
2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் திகதி தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர். சம்பந்தனின் தலைமையில் உருவானதே இந்தக் கூட்டமைப்பு. அதன் செயலாளராக தமிழரசுக் கட்சியைச் சார்ந்த மாவை சேனாதிராஜா எம்.பியூம் பிரதித் தலைவராக தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த அப்பாத்துரை விநாயக மூர்த்தியூம் பிரதிச் செயலாளர்களாக ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலாநாதன் எம்.பியூம் ஈ.பி.ஆர்.எல்.எப். செயலாளர் நாயகம் சுரே~; பிரேமச்சந்திரன் எம்.பியூம் நியமிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள இலக்கம் 6இ முதலாம் ஒழுங்கைஇ பருத்தித்துறை வீதியை தமது தலைமையகமாக கொண்டியங்கும் இந்தக் கூட்டமைப்பு தொடர்ந்து வந்த பொதுத் தேர்தல்களில் வடக்கு- கிழக்கில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றமை தெரிந்ததே.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக பதிவதில் இழுபறி!
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment