புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் மேலும் 552 பேர் இன்று சமூகத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.
இன்றையதினம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறவிருக்கும் வைபவத்தில் இவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட விருக்கின்றனர்.
இதுவரை 7 ஆயிரத்து 500ற்கும் அதிகமான முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பிரிகேடியர்- புனர்வாழ்வு பெற்றுவரும் சுமார் 2 ஆயிரத்து தொள்ளாயிரம் பேர் கூடிய விரைவில் சமூகத்துடன் இணைக்கப்படவிருப்பதாக குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில்- எஞ்சியவர்களை இவ்வருட இறுதிக்குள் விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியிருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment