சவூதியில் தடையை மீறி கார் ஓட்டியதாக 5 பெண்கள் கைது

Monday, July 18, 2011

சவூதியில் கார் ஓட்டியதற்காக 5 பெண்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டதாக சவூதி சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

செங்கடல் கரையில் உள்ள ஜித்தாவில் கார் ஓட்டியதாக பெண் ஒருவரை பொலிசார் கைது செய்ததாக சவூதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இமான் அல் நப்ஜான் கூறினார்.
அன்று மாலையே மேலும் 4 பெண்கள் இதே காரணத்துக்காக கைது செய்யப்பட்டதாக அல் நப்ஜான் தெரிவித்தார்.
சவூதியில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு சட்டரீதீயாகத் தடை எதுவும் இல்லை. எனினும் பத்வாக்களின் மூலமாகவும், மூத்த மதகுருக்களின் ஆணைப்படியும் அவர்கள் கார் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

IP
Blogger Widgets