யாழ்ப்பாணத்திலிருந்து தாஜுதீன்-சுஹைர் ஷெரீப்- லத்தீப்
நீண்ட காலமாக மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில் காணப்பட்ட 34 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இந்த வீதி வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் வடக்கின் அபிவிருத்தி குறித்த கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுவரும் வேளையில் அமைச்சர்; பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இணங்க துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு இத்திட்டத்துக்கான நிதியை ஒதுக்கியூள்ளது.
இன்று ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்புப் பணிகளை 18 மாத காலத்துக்குள் பூர்த்தி செய்து குறிப்பிட்ட வீதியை மக்கள் பாவனைக்கு விடுவதற்கு துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் பசில் வீதி அபிவிருத்தி அதிகாரிகளை பணித்துள்ளார்.

0 comments:
Post a Comment