ஆயூர்வேத எக்ஸ்போ கண்காட்சி!

Monday, July 18, 2011

ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார

ஆரோக்கியமான சமூகமொன்றைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய அரசாங்கம் ஆயூர்வேத மருத்துவத்துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக பிரதமர் டி. எம். ஜயரட்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஆயூர்வேத கண்காட்சியான எக்ஸ்போ- 2011ன் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உலகில் ஆயூர்வேத மருத்துவத்துறைக்கு 5000 ஆண்டு கால வரலாறு உண்டு என குறிப்பிட்ட பிரதமர்இ இலங்கைக்கு 2500 வருட ஆயூர்வேத மருத்துவ வரலாறு உண்டெனவூம் பழைமையான இத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான செயற்திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவூம் தெரிவித்தார்.
ஆயூர்வேத கண்காட்சியான ‘ஆயூர்வேத எக்ஸ்போ- 2011’ நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதமர் மேலலும் உரையாற்றுகையில்:-
2500 ஆண்டுகளுக்கு முன்பு எமது அரசர்களின் ஆட்சிக் காலத்திலேயே நாட்டில் ஆயூர்வேத மருத்துவத்துறை பிரசித்தி பெற்றுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஆயூர்வேத வைத்தியர் இருப்பார். சகல நோய்களுக்கும் அவரையே மக்கள் நாடுவர். நமது முன்னோர் அநேகமான நோய்களுக்கு கொத்தமல்லி போன்ற மூலிகைகளையே மருந்தாகக் கொண்டனர். அவர்கள் நூறு வருடத்திற்கு மேல் சுகதேகிகளாக வாழ்ந்துள்ளனர்.

இதனைக் கருத்திற்கொண்டே மஹிந்த சிந்தனையில் ஆயூர்வேத மருத்துவத்துறையை மேம்படுத்தப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தார். அது தற்போது சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இக்கண்காட்சியானது இத்துறையில் ஈடுபட்டுள்ளோரை ஊக்குவிப்பதுடன் சிறந்த சந்தைவாய்ப்புக்கான சந்தர்ப்பமாகவூம் அமையூம்.
1956ம் ஆண்டு எஸ். டபிள்யூ+. ஆர். டீ. பண்டாரநாயக்க ஆயூர்வேத மருத்துவத்தைக்கட்டியெழுப்ப பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்தார். கம்பஹாவில் அதன் ஆராய்ச்சிக் கல்லூரியையூம் மருத்துவ நிலையத்தையூம் ஸ்தாபித்தார் எனவூம் பிரதமர் மேலும் தெரிவித்தார்

0 comments:

IP
Blogger Widgets