யாழ்ப்பாணத்திலிருந்து தாஜுதீன்-சுஹைர் ஷெரீப்-லத்தீப்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவூ அளிப்பதன் மூலமே வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளின் முழுமையாக பயனை பெற்றுக்கொள்ள முடியம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் வடக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இது தொடா;பான நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் தொடரந்தும் உரையாற்றுகையில்-
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமிழ்த் தலைமைத்துவங்கள் முழுமையான அக்கரை காட்டவில்லை.
எனினும் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தமிழ் மக்களின் நலனில் மிகுந்த அக்கறையூடன் செயற்பட்டுவருவதுடன் நிரந்தரத் தீர்வூ ஒன்றினையூம் பெற்றுத்தருவதிலும் கூடுதல் கரிசனை காட்டி வருகிறார்.
வட பகுதி மக்கள் இன்று நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தந்தமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவூக்கு நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம் என்றும் அமைச்சர் கூறினார்

0 comments:
Post a Comment