65 வயது வயோதிபருக்கு தன் மனைவியை விற்ற தரகர் : திருமலையில் சம்பவம்

Monday, July 18, 2011

திருமணத்தரகர் ஒருவர் தனது மனைவியை 65 வயது வயோதிபருக்கு விற்றதாகக் கூறப்படும் சம்பவம் திருகோணமலை மகாதிவுல்வௌ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:


மொறவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாதிவுல்வௌ பிரதேசத்துக்கு வந்த திருமணத்தரகர் ஒருவர் அதே பிரதேசத்திலுள்ள செல்வந்தர் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றார். அங்கு தனிமையில் வாழ்ந்துவந்த 65 வயதுடைய வயோதிபர் ஒருவர் தனக்கு ஒரு மணமகள் தேவை அதுவும் இளையவராக இருக்கவேண்டும் எனத் தரகரிடம் கேட்டாராம்.

இதனையடுத்து, தரகர், ஐயா! இன்னும் இரண்டு நாட்களில் உங்கள் முன்னிலையில் ஒருத்தியைக் கொண்டுவந்து நிறுத்துகிறேன் பாருங்கள் எனக் கூறி விட்டுச் சென்றார்.தரகர் தனது வீட்டுக்கு விரைந்ததும், எனக்கு வெளியில் அலுவல் ஒன்று உள்ளது. அதன் பொருட்டு இரண்டு நாள்கள் நான் வெளியில் செல்கின்றேன். நீ தனியாகத் தான் இருப்பாய். உன்னை பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்துச் செல்கிறேன். நாளைகாலை என்னுடன் வா என மனைவியிடம் கூறினாராம்.

கணவன் என் மீது இவ்வளவு அன்பா? இப்படியான தொரு கணவன் கிடைத்ததற்கு நான் என்ன தவம் செய்தேனோ? என எண்ணிய வண்ணம் அவளும் சம்மதித்தாள்.மனைவியின் சம்மதம் கிடைத்ததும், உடனடியாக வயோதிபர் வீட்டுக்குச்சென்ற தரகரான கணவன் 8ஆயிரம் ரூபா காசு வாங்கினார். அதுவும் வாடகைக் காசாம்.மறுநாள் காலை மனைவி சகிதம் அந்த செல்வந்தர் வீட் டுக்குச் சென்ற அவர் வயோதிபரிடம் மனைவியை ஒப்படைத்து விட்டுச் சென்றார்.

கணவன் சென்ற மறு கணமே அவளிடம் பிரஸ்தாப வயோதிபர் பாலியல் சேட்டையில் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. செய்வதறியாது தவித்த அவள் இரண்டு நாள்களுக்குப் பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாள்.

முறைப்பாட்டை அடுத்து, தீவிரமடைந்த பொலிஸார் வயோதிபரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர். அப்போது தான், கல்யாணத் தரகர் தனது மனைவியை 8ஆயிரம் ரூபாவுக்கு விற்றார் எனத் தெரிய வந்துள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

IP
Blogger Widgets