யாழ் மாவட்டத்தில் 80 சதவீத வாக்களிப்பு

Monday, July 18, 2011


யாழ்ப்பாணத்திலிருந்து எம்.ஜே.எம். தாஜுதீன்- சுஹைர் ஷெரீப்
யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற தபால்மூல வாக்களிப்பில் 80 சதவீதமானவர்கள் வாக்களித்ததாக யாழ் மாவட்டச் செயலகத்தின் நிருவாக அதிகாரி கே. கருனாகரன் தெரிவித்தார்.

இடைநிறுத்தப்பட்டிருந்த 64 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றும் நாளையூம் நடைபெறுகின்றது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 155 வாக்களிப்பு நிலையங்களில் தபல்மூல வாக்கொடுப்பு இடம்பெற்று வருவதாக யாழ்.உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ். கருனாநிதி தெரிவித்தார்.
யாழ் மாவட்டச் செயலகத்தின் நிருவாக அதிகாரி கே. கருனாகரன் முன்னிலையில் வாக்களிப்பு இடம்பெற்றது. இங்கு 102 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளதாகவூம் பிற்பகல் 2:00 மணி வரையில் 82 பேர் வாக்களித்துள்ளதாகவூம் அவர் கூறினார்.
வாக்களிப்பைக் கண்காணிப்பதற்காக யாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் 11 உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தபால்மூல வாக்கொடுப்பை அமைதியாகவூம் நீதியாகவூம் நடத்துவதற்கு தேவையான சகல பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தலுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.
வாக்குகள் எண்ணும் பணிகள் எதிர்வரும் 23 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவூள்ளது.
இன்றும் நாளையூம் நடைபெறவூள்ள தபால்மூல வாக்களிப்பில் 60546 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

0 comments:

IP
Blogger Widgets