அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக மக்கள் சபை (ஜனசபா) திட்டம் நடை முறைக்கு கொண்டு வரப்படும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
இந்த மக்கள் சபைத் திட்டம் நாட்டில் ஏற்படுத்தப்படும் நிரந்தர சமாதானத்தின் பகுதியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் பங்குபற்றிய ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறுகையில்- இந்த மக்கள் சபைத் திட்டம் இந்தியாவின் பஞ்சாயத்து முறை போன்று இருக்கும்.
அதற்கு மேல் உள்ளூராட்சி சபைகள்- மாகாண சபைகள்- பாராளுமன்றம் என அரசியலதிகார கட்டமைப்புகள் செயற்படும் என்றார்.

0 comments:
Post a Comment