நிருபமாராவ் கருத்து
வடக்கு- கிழக்கு இணைப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கமும்- அங்குள்ள அரசியல் கட்சிகளுமே தீர்மானிக்க வேண்டும். இந்தியா எவ்வகையிலும் தலையிடாதென இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார். இலங்கையிலிருந்து புதுடில்லி சென்றுள்ள பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
1987 இல் இந்தியா வடக்கையூம் கிழக்கையூம் இணைக்கும் யோசனையை முன்வைத்தது. இப்போது இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைவாக வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கமும் அங்குள்ள அரசியல் கட்சிகளுமே இது தொடர்பாகத் தீர்மானிக்க வேண்டும். இந்தியா எவ்வகையிலும் தலையிடாது.
இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா எவ்வகையிலும் தலையிடாது. அதேநேரம் இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட உதவிகளையூம் செய்யூம்.
இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டுமென்பதில் இந்தியா மிகவூம் உறுதியூடனும் ஆர்வமாகவூம் இருக்கிறது. இதற்காக எத்தகைய அழுத்தங்களையூம் இந்தியா கொடுக்காது.
13ஆவது திருத்தத்துக்கும் கூடுதலான அதிகாரங்களுடன் ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வூ காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா ஆர்வமாக இருக்கிறது.
இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என்பதில் இந்தியா மிகவூம் அக்கறையூடன் இருக்கிறது. இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு இந்திய அரசு மிகவூம் ஒத்துழைத்து வருகிறது. அதேபோல இலங்கை முதலீட்டாளர்களும் இந்தியாவில் முதலீடு செய்ய இந்தியா ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
இந்தியப் பொருளாதாரம் மிகவூம் முன்னேற்றமாக இருக்கிறது. அதேபோல இலங்கைப் பொருளாதாரமும் சிறப்புற இந்தியா உதவி செய்யூம் என்றும் நிருபமா ராவ் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment