நாயகன் ஜீவா உடன் இணைந்து ”வந்தான் வென்றான்” படத்தில் டாப்சீ நடித்துள்ளார்.
நான் தென்னிந்திய பட உலகில் நுழைவேன் என கனவில் கூட நினைத்து பார்த்தது கிடையாது. இப்போது வெற்றி பட நாயகியாக இருக்கும் எனக்கு பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளது.
கோவில் மாநகரான மதுரை மண்ணில் என் நடிப்பு வாழ்க்கை ஆரம்பமானதை எண்ணி பூரிப்படைகிறேன். ”ஆடுகளம்” படத்திற்காக ரயில்வே காலனியில் இருந்த நாட்களை என்னால் மறக்க முடியாது. உறவினர்களைப் போல அங்கே அனைவரிடமும் பாசம் காட்டி பழகிய நாட்கள் என் நெஞ்சில் தங்கிவிட்டது.
மதுரையை நான் பிறந்த மண்ணாக மதிக்கிறேன். என் வாழ்க்கையில் மதுரையை மறக்க முடியாது என்று டாப்சீ உருகியுள்ளார். |
0 comments:
Post a Comment