இயக்குனர் கதிர் இயக்கும் காதல் படமான ”கோடை விடுமுறை” யின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
படத்துக்கு கவிஞர் வாலி பாடல்களை எழுதவுள்ளார். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் பெயர் அறிவிக்கப்படும் முன்பே நாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க போவதாக தகவல் பரவியுள்ளது. படத்துக்கு ரகுமான் இசையமைக்க போவதாக சொல்லியிருக்கிறார்கள்.
இப்போது ஸ்ரீகாந்த் இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார் என்கிறது பட வட்டாரம். இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம், திகதி பிரச்சினை தான்.
இந்நிலையில் படத்தின் இயக்குனர், நான் கோடை விடுமுறையில் நடிக்க போவதாக தெரிவித்துள்ளார். நான், வேறு சில படங்களில் நடிக்க திகதி கொடுத்திருப்பதால், இதில் நடிக்க மறுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது என்று ஸ்ரீகாந்த தெரிவித்துள்ளாராம். |
0 comments:
Post a Comment