”மைனா” படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை அமலா பால், ரசிகர்கள் மனிதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.
தற்போது அவர் நடிப்பில் வந்திருக்கும் ”தெய்வத்திருமகள்” படமும், அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துவிட்டது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். இருந்தாலும் அவர் மனதில் ஒரு சின்ன ஏக்கம்.
சின்ன வயதிலேயே பொறியியல் படிக்க ரொம்ப ஆசைப்பட்டாராம் அமலா பால். ஆனால் நடிப்பில் பிசியாகிவிட்டதால்,பொறியியல் படிக்க முடியவில்லையாம். இதனால் இப்போது பி.ஏ. படித்து வருகிறாராம்.
எர்ணாகுளத்தில் உள்ள செயின்ட் தெரசா கல்லூரியில் 3 ம் ஆண்டு படித்து வரும் அமலா பால், தற்போது லிங்குசாமியின் ”வேட்டை” படத்தில் நடித்து வருகிறார். சூட்டிங் இல்லாத நாட்களில் எர்ணாகுளத்திற்கு சென்று தவறாமல் கல்லூரிக்கு போய் விடுகிறாராம்.
என்னதான் நடிப்பில் ரொம்ப பிசியாக இருந்தாலும், படிப்பு தான் ரொம்ப முக்கியம் என்று கூறுகிறார் இந்த மைனா. |
0 comments:
Post a Comment