"அங்காடித்தெரு" படத்திற்கு பிறகு அஞ்சலியின் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் ”கருங்காலி”.
களஞ்சியம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கணவன், மனைவி வேலைக்கு செல்வதாலும், இளம் தம்பதிகளின் குடும்ப பிரச்சினைகளை எடுத்து உரைக்கும் படமாக இப்படத்தை இயக்கி இருக்கிறார் களஞ்சியம்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, முதலில் இந்த படத்தில் நடிக்க மீரா ஜாஸ்மினிடம் தான் கதை சொன்னேன். ஆரம்பத்தில் நடிப்பதாக கூறிய மீரா ஜாஸ்மின், கடைசி நேரத்தில் மறுத்துவிட்டார். அதன்பிறகு பத்மப்ரியா உள்ளிட்ட இன்னும் சில நடிகைகளிடம் பேசினேன். யாருக்கும் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை. கடைசியாக அஞ்சலியிடம் கதையை சொன்னேன்.
கதையை கேட்டதும் உடன் நடிக்க ஒப்புக்கொண்டார். இருந்தாலும் படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக தொலைக்காட்சி நடிகர் ஒருவர் நடிப்பதாக அஞ்சலியிடம் சொன்னபோது, அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படாமல், யார் நடித்தால் என்ன, எனக்கு என்னுடைய கதாபாத்திரம் ரொம்ப பிடிச்சிருக்கு, கதை பிடிச்சிருக்கு நான் நடிக்கிறேன் என்று சொன்னார்.
அஞ்சலி மட்டும் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை என்றால், நிச்சயம் கருங்காலி படம் எடுத்திருக்கவே முடியாது என்று தெரிவித்தார் களஞ்சியம். |
0 comments:
Post a Comment