குழந்தை நட்சத்திரம் சாரா மேல் பாசத்தை கொட்டிய அமலா பால்

Wednesday, July 20, 2011


இயக்குனர் விஜய் இயக்கிய ”தெய்வத்திருமகள்” படத்தில் நவநாகரீக இளம்பெண் ஸ்வேதா கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார்.
இன்னும் பதின் பருவ மங்கையாக உள்ள அமலாவை படத்திற்காக இருபத்தி நான்கு வயது இளம்பெண்ணாக மாற்றி இயக்குனர் விஜய் நடிக்க வைத்தாராம்.
படத்தில் விக்ரமின் மகளாக நடித்துள்ள குழுந்தை நட்சத்திரம் சாராவோடு பழகிய நாட்கள் அமலாவின் மனதில் அழுத்தமாக பதிந்துள்ளது. எனக்கு குழந்தைகள் என்றால் கொள்ளை பிரியம். என்னை சுற்றி குழந்தைகள் ஓடி, ஆடினால் எனக்குள் மகிழ்ச்சி பொங்கி புரண்டு ஓடும்.
ஒரு பாடலில் நானும் சாராவும் நடித்த போது அவள் மேல் ரொம்ப பாசம் காட்டினேன். நான், அழகிய சாராவுடன் இணைந்து நடிக்கிறேன் என்பதையே மறந்தேன். அந்தளவுக்கு அவளோடு நெருக்கமானேன்.
படப்பிடிப்பில் என்னையும் சாராவையும் பார்க்கிறவர்கள் ”ஹை, இரண்டு குழந்தைகள் சேர்ந்து விளையாடுதுங்க” என்று குஷியாக சொன்னார்கள் என்று குழந்தை நட்சத்திரம் சாராவுடன் நடித்த அனுபவத்தை குறிப்பிட்டுள்ளார் அமலா பால்.

0 comments:

IP
Blogger Widgets