இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் மார்கன். இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இவர் சிறப்பாக விளையாடினார்.
இதன் மூலம் பயிற்சி அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. இதற்கு ஐ.பி.எல் போட்டித்தான் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மார்கன் கூறியதாவது: ஐ.பி.எல் போட்டியில் இருந்து நான் ஏராளமான பாடம் கற்றுக் கொண்டேன். ஐ.பி.எல் போட்டியில் தான் என்னால் தற்போது சிறப்பாக விளையாட முடிகிறது. ஐ.பி.எல் போட்டியில் ஆடிய போது டிராவிட்டிடம் இருந்து பல நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன்.
மார்கன் இந்த ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல் போட்டியில் ஏராளமான பாடம் கற்றுக் கொண்டேன்: மார்கன்
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment