இங்கிலாந்து மண்ணில் இதுவரை சதம் அடித்தது இல்லை. இம்முறை எப்படியும் முதல் சதத்தை அடிக்க ஆர்வமாக உள்ளேன் என இந்திய வீரர் லட்சுமண் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் ”மிடில் ஓர்டர்” வீரர் லட்சுமண் (36). இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 8146 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றுள்ள இவர், இக்கட்டான நேரங்களில் அணிக்கு தேவையான ரன்கள் சேர்த்து கைகொடுப்பார்.
டெஸ்ட் வாழ்க்கை குறித்து லட்சுமண் கூறியது, 1996 முதல் 2000 வரையில் அணிக்கு துவக்க வீரராக, என்னால் முடிந்த வரை சிறப்பான ஆட்டத்தை கொடுக்க முயற்சித்தேன். இதில் ஏதாவது இரண்டு இன்னிங்சில் சரியாக விளையாடவில்லை என்றால், உடனே அணியில் இருந்து நீக்கிவிடுவார்கள். இது அடிக்கடி நிகழ்ந்தது.
இந்த நான்கு ஆண்டுகள் எனக்கு கடினமாக இருந்தது. இந்த காலத்தில் 16 டெஸ்டில் பங்கேற்று 626 ரன்கள் தான் எடுத்தேன். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தா டெஸ்ட் (2001) போட்டியில் 281 ரன்கள் எடுத்த பின்பும், டெஸ்ட் அணியில் எனக்கான இடம் நிரந்தரம் இல்லாமல் தான் இருந்தது.
2004 முதல் 2007 வரை பங்கேற்ற 31 டெஸ்டில் 1596 ரன்கள் மட்டுமே எடுத்தேன். ஏனெனில் அப்போது இந்திய அணி, ஐந்து பந்துவீச்சாளர்களை கொண்டு களமிறங்குவது என்று முடிவெடுத்ததால், ஒருநாள் அணியில் எனக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இது என்னை பாதித்தது. இதனால் போட்டிகளில் சரியான முறையில் கவனம் செலுத்த முடியவில்லை.
கிரிக்கட் ஒரு விளையாட்டு. சில நேரங்களில் சாதகமாகவும், சில நேரங்களில் சாதகமில்லாமல் போகலாம். முடிவுகளை வைத்து தீர்மானத்துக்கு வந்துவிடாமல், தொடர்ந்து சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்துவதே நல்லது என முடிவெடுத்தேன். இதன் பின் கூடுதல் முயற்சிகள் செய்து, ஒவ்வொரு போட்டியிலும் நிரூபிக்க துவங்கினேன்.
ஏனெனில், செய்வதை சரியாக செய்தால், வாய்ப்பு தானாக தேடிவரும் என்று நன்றாகத் தெரியும். இதன் பின் அணியில் தெரிவு செய்யப்படுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதாவது கப்டன் கும்ளே, கிறிஸ்டன், கப்டன் டோனி ஆகியோர் வருகைக்குப் பின், டெஸ்ட் அணியில் எனது இடம் உறுதியானது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக, இந்திய அணியில் தொடர்ந்து நீடித்து வருகிறேன். இதன் மூலம் போட்டிகளில் எவ்வித நெருக்கடியும் இன்றி, சுதந்திரமாக விளையாடி திறமையை வெளிப்படுத்த முடிகிறது.
இங்கிலாந்து மண்ணில் இதுவரை நான் சதம் அடித்ததில்லை. இந்திய அணியும் இங்கு ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இம்முறை எப்படியும் சிறப்பாக விளையாடி, முதல் சதத்தை அடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன் என்று லட்சுமண் தெரிவித்தார்.
இங்கிலாந்து மண்ணில் முதல் சதம் அடிக்க ஆர்வம்: லட்சுமண் விருப்பம்
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment