உலக கோப்பை கால்பந்து போட்டி: பிரான்ஸ் - சுவீடன் இன்று மோதல்

Monday, July 18, 2011

ஜேர்மனியில் 2011ம் ஆண்டிற்கான பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுகிறது. அரையிறுதிப் போட்டியில் வெற்றியை தவற விட்ட பிரான்ஸ் – சுவீடன் அணிகள் இன்று மோதுகின்றன.

இந்த ஆட்டம் மூன்றாவது இடத்தை நிர்ணயிப்பதற்கான ஆட்டம் ஆகும். ஜேர்மனியில் இந்த அணிகள் சிறப்பாக ஆடியதைத் தொடர்ந்து இந்த அணிகள் 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்று உள்ளன.
ஒலிம்பிக் போட்டிக்கு முந்தய சுவாரஸ்யத்துடன் இந்த அணிகள் களம் இறங்குகின்றன. ஜேர்மனி உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5.30 மணி அளவில் சின்ஷெம் ஆடுகளத்தில் சுவீடன்- பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.
சுவீடன் அணி 2003ம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணியாகும். 1993ம் ஆண்டு இந்த அணி மூன்றாம் இடத்தை பெற்றது.
உலக கோப்பை போட்டியில் பிரான்ஸ் அணி பெரிய சாதனை எதுவும் படைக்கவில்லை. இன்றைய போட்டியில் மூன்றாவது இடத்திற்கு இரு ஐரோப்பிய அணிகள் மோதுகின்றன.
இதே போன்று கடந்த 1991ம் ஆண்டு உலக கோப்பை பெண்கள் கால்பந்து போட்டியில் மூன்றாவது இடத்திற்காக ஜேர்மனி-சுவீடன் அணிகள் மோதின. அதில் ஜேர்மனி 0-4 என்ற கோல் கணக்கில் சுவீடனிடம் தோற்றது.

0 comments:

IP
Blogger Widgets