அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று யாழ். விஜயம்!

Monday, July 18, 2011

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ். மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு அபிவிருத்திகளைப் பார்வை யிட்டார். மீள்குடியமர்த்த ப்பட்ட மக்களின் குறைகளையூம் கேட்டறிந்து கொண்டார்.

அவரை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா- வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி- யாழ். நகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சி அங்கத்தவர்கள்- பொதுமக்கள் எனப் பலரும் ஒன்று திரண்டு மங்கள வாத்தியங்களுடன் வரவேற்றனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியூதவியூடன் யாழ். மாவட்டத்தின் பல பகுதிகள் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றமையினை சுட்டிக்காட்டிய மக்கள் அமைச்சரை வாழ்த்தி கோஷம் எழுப்பியமையூம் மகிழ்ச்சி ஆரவாரத்தில் மாலை அணிவித்து வரவேற்றமையூம் குறிப்பிடத்தக்கது.

0 comments:

IP
Blogger Widgets