சர்வதேச குற்றவியல் நீதிமன்றை ஆசிய நாடுகள் நிராகரிக்கும்!

Monday, July 18, 2011

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தகவல்
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளை ஆசிய - ஆபிரிக்க நாடுகள் ஏற்றுக் கொள்வதில்லையென ஆசிய - ஆபிரிக்க சட்ட ஆலோசனைப் பேரவையின் 50வது மாநாட்டில்  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பேரவையின் தற்போதைய தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று அறிவித்தார்.
கொழும்பில் ஐந்து நாட்களாக இடம்பெற்ற இம்மாநாட்டில் இந்த முடிவூ எடுக்கப்பட்டதாக
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அறிவித்தார். இந்த மாநாட்டில் ஆசிய - ஆபிரிக்க சட்ட ஆலோசனைப் பேரவைச் செயலாளர் நாயகம் பேராசிரியர் டாக்டர் றஹ்மான் மொஹமட்- உகண்டா சட்ட மா அதிபர் பீட்டர் நியோம்பி எம்.பி. கானா சட்ட மா அதிபர் மார்ட்டின் அமிடு ஆகியோரும் பங்கேற்றனர்.

அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது-
கடந்த ஐந்து நாட்களாக இடம்பெற்ற மாநாட்டில் 47 உறுப்பு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 200க்கு மேற்பட்ட பேராளர்கள் பங்கேற்றனர். 10 நாடுகளின் நீதியமைச்சர்கள் 6 நாடுகளின் சட்டமா அதிபர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் நீதித்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்று காத்திரமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள்  ஆசிய - ஆபிரிக்க நாடு களுக்கு ஏற்புடையதல்ல என்பதை காத்திரமான ஆழமான கலந்துரையாடல்கள் கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் மாநாடு தீர்மானமாக நிறைவேற்றியிருப்பது மிகவூம் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஆசிய - ஆபிரிக்க நாடுகளின் நீதி விசா ரணை முறைகளுக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்கு மிடையே பாரிய வித்தியாசங்கள் காணப் படுகின்றன. எனவே இந்த விசாரணைகள் எமக்குப் பொருத்தமற்றவை. ஜப்பான்- தென்கொரியா- கம்போடியா ஆகிய மூன்று நாடுகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசா ரணைகளை ஏற்றுக்கொண்டுள்ளபோதும் கம்போடியா இந்தப் பேரவையின் உறுப்புரிமை நாடல்ல என்றார்.
சர்வதேசப் பயங்கரவாதம்இ நாடுகளுக்கிடை யிலான கடத்தல்இ சர்வதேச மோசடிகள்இ பெண்கள்இ சிறுவர்களைக் கடத்தல்இ சர்வதேச பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாகவூம் பேரவை மாநாட்டில் ஆராயப்பட்டு விரிவான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சர்வதேச சட்டவாக்கத்தில் பாரிய பங்களிப்பை நல்குவதென முடிவூ செய்யப்பட்டுள்ளது. நாடுகளுக்கு மத்தியில் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டு வருவதில் மாநாடு உறுதியான தன்மையை வெளிப்படுத்தியது. பேரம்பேசும் விடயத்தில் முன்னேற்றகரமான செயற்பாடொன்றை எட்டும் வகையிலான யோசனைகள் ஆராயப்பட்டதுடன்- அது தீர்மானமாகவூம் மேற்கொள்ளப்பட்டது. ஒரு வருட காலத்துக்குள் அதாவது இலங்கையின் தலைமைத்துவம் இருக்கும் வரைக்குள் முன்னேற்றகரமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் மாநாடு உறுதி பூண்டது.
பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் குறித்து ஆராயப்பட்டு முடிவூகள் மேற்கொள்ளப்பட்டு கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்

0 comments:

IP
Blogger Widgets