யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் சங்கிலியனின் உருவச் சிலையை இந்திய சிற்பியின் உதவியூடன் புதுப்பொலிவூடன் உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பழைய சிலை மாநகரசபையால் அகற்றப்பட்டுள்ளதுடன் புதிய சிலையை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப் பட்டுள்ளது.
இறுதியாக நடைபெற்ற மாநகர பொதுக் கூட்டத்தில் முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டுள்ள சங்கிலிய மன்னனின் சிலையை உடைத்து புதிய சிலையை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை யாழ். மாநகரசபையின் ஆளுந்தரப்பினர் முன்வைத்தனர். ஆளும் தரப்பால் இது முழுமையாக புனரமைக்க வேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய பண்டைய மன்னன்னான சங்கிலியனின் சிலை விரைவில் புதுப்பொலிவூடன் நிர்மாணிக்கப்படவூள்ளதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment