வடக்கை மீள கட்டியெழுப்பும் சந்தர்ப்பத்தை மக்கள்; பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!
Monday, July 18, 2011
அமைச்சர் றிசாத் கோரிக்கை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே யாழ். மாவட்ட மக்களது வாழ்வாதார மேம்பாடுகளுக்கான அனைத்து திட்டங்களையூம் நடைமுறைப்படுத்துகின்றது என கைத்தொழில்- வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியூதீன் தெரிவித்தார்.
யாழ். - சங்குப்பிட்டி ஏ-32 நாவற்குழி - கேரதீவூ பாதைப் புனரமைப்பு பணி களின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இப்பாதை புனரமைப்புக்கென 1387 மில்லியன் ரூபாவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்துள்ளது. 17.4 கிலோ மீட்டர் கொண்ட இப்பாதை அமைப்பு பணிகள் 20 மாதங்களில் நிறைவூறும்.
இங்கு அமைச்சர் றிசாத் பதியூதீன் மேலும் பேசுகையில் கூறியதாவது :-
யாழ்ப்பாணம் தமிழ் பாரம்பரியங்களைக் கொண்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த மண்ணின் பெருமையினை உலகறியூம். கடந்த கால யூத்தத்தால் யாழின் பொருளா தார அபிவிருத்திகள் முடக்கப்பட்டிருந்தன. இதனால் இம்மக்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
யூத்தத்தால் அழிந்து போன வடக்கை மீள் கட்டியெழுப்புவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதனை புத்திசாதுரியமாக யாழ். மக்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் இன்று யாழ்ப்பாணம் புதுப் பொலிவூ பெறுகின்றது. கோடிக்கணக்கான ரூபாய்களை கொண்ட அபிவிருத்திகளை கண்டு வருகின்றது. என்றும் அமைச்சர் றிசாத் பதியூதீன் கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment