இலங்கைக் கிரிக்கெட் தேர்தல் அடுத்த வருடம்!

Monday, July 18, 2011

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு
இலங்கைக் கிரிக்கெட் நிர்வாக குழுவுக்கான தேர்தல் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே  இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் ஊழல்களோ பின்னடைவூகளே ஏற்படவில்லை. சர்வதேச மட்டத்துக்கு எமது விளையாட்டுத்துறையை மேம்படுத்தி 2015 உலகக் கிண்ணத்தை வென்றெடுப்பதே எமது இலக்காகும். கிரிக்கெட்டில் அரசியல் கலக்கக்கூடாது என்றும் அமைசசர் கூறினார்.

0 comments:

IP
Blogger Widgets