புனர்வாழ்வளிக்கப்பட்டோரை மீண்டும் பயங்கரவாதத்தில் ஈடுபத்த முயற்சி!

Monday, July 18, 2011

பாராளுமன்றத்தில் பிரதமர்
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களை மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவு செயற்பாட்டாளர்களும் சில அரச விரோத சக்திகளும் முயன்று வருவதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத கலத்துக்கு நீடிக்கும் பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களிடமிருந்தும் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலிகளிடமிருந்தும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வடக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ஆ \யுதங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்த படையினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மனிதாபிமான நடவடிக்கையின்போது இறுதிக்கட்டத்தில் புலிகளிடமிருந்து தப்பிச்சென்ற  பல உறுப்பினர்களை படையினரால் கைது செய்யமுடியவில்லை. அவர்கள் பற்றிய தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார்.

0 comments:

IP
Blogger Widgets