மின்சார சபை அறிவிப்பு
நாட்டில் மின்சார வெட்டை அமுல்படுத்த எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லையென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
முன்னறிவித்தல் இன்றி நாட்டில் திடீர் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக வெளியாகியுள்ள வதந்தியில் எவ்விய உண்மையும் இல்லையெனவும் சபை அறிவித்துள்ளது.
தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துவருதல் மற்றும் அனல் மின் உற்பத்தி நிலையங்களில் தொழில்நுட்பக் கோளாறு என்பன காரணமாக மின் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளபோதும் நாட்டில் மின்சார வெட்டை அமுல்படுத்த எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
எனினும் இப்போது அனல் மின் உற்பத்தி நிலையங்கள் செயற்படுத்தவேண்டியிருப்பதால் மாலை 6.30 தொடக்கம் காலை 9.30 மணி வரையில் அத்தியாவசிய தேவையற்ற மின்பாவனைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment